
தாம்பரம் மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு பணி துவக்க விழாவில் கூடுதல் வசதிகளை வேண்டிய அதிமுக கவுன்சிலர், உடனடியாக அதிகாரிகளை கூடுதல் வசதிகளுடன் மறு திட்டம் தாயாரித்து பணிசெய்ய வலியுறுத்திய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா
தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் நூத்தஞ்சேரியில் மிக பழைமையான குளத்தை 57 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி சுற்றுசுவர் அமைக்கும் விதமாக திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் அதன் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்கள்.
அப்போது அந்த வார்டின் அதிமுக கவுன்சிலர் தேவேந்திரன், திமுக எம்.எல்.ஏ விடம். குளம் சீரமைப்பின் போதே 500 மீட்டர் நடைப்பாதை, அமரும் இருக்கைகள், மின்விளக்கு, காவளாளி அறை, என கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்ற எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் குளத்தை சுற்றிபார்வையிட்டு அதிமுக கவுன்சிலர் கேட்கும் வசதிகளுடன் மறு திட்டம் தயாரித்து உரிய அனுமதி பெற்று பணிகளை செய்திட வலியுறுத்தினார்.
இதனை பார்த்த அதிமுக கவுன்சிலர் திமுக எம்.எல்.ஏ வுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ், ஜெயபிரதீப் சந்திரன் அதிமுக கவுன்சிலர்கள் தேவேந்திரன், வாட்டர் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.