நாம் தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாம் தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன், திமுக அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது

திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் மதுபான குற்றவாளிகள் திமுக ஆட்சியில் செழிப்பாக இருக்கிறார்கள். ஆனால் என்டிஏ மக்கள் உடல்நலனில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. என்டிஏவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் போதைப்பொருளில் இருந்து தமிழகத்தை மீட்கும்.

தமிழகத்தில் தற்போது குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. என்டிஏ அரசு தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.

தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என குழந்தைக்கும் தெரியும். திமுக அரசை குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று மக்கள் கூறுகின்றனர். இத்தனைக்கும் பாஜகவின் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மும்மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.வளர்ச்சி திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி வழங்கி உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.