
மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல்.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?. தே.ஜ கூட்டணி மிக வலிமையாக உள்ளது. பிரதமர் மோடி நமக்காக துணை நிற்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.