சென்னை பள்ளிக்கரணை பாரதிதாசன் 2வது தெருவில் மெட்ரோ வாட்டர் சார்பில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு(59) என்பவரும் திருப்பதி என்பவரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்காததால் உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மண் சரிவில் சிக்கியவரை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அன்பின் உடலை மீட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பதியை காயங்களுடன் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி பணியில் மேற்கொண்டதால் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தததாக கூறப்படுகிறது, சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.