ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் 26 வது வட்ட செயலாளர் முஜிபூர்ரகுமான், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் மகளிர் அகல் விளக்குகளை ஏந்தியவாறு ரோஜா பூக்களை வேட்பாளர்மீது தூவி வரவேற்பு அளித்தனர்.