தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு

மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி

தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது,

ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் நிறுத்தும் பிரமாண்ட பார்க்கிங் வசதியுடன் 3 அடுக்கு கட்டிடத்த்தில் மாமன்றகூட்ட அரங்கு, ஆய்வு கூட்டம், அதிகாரிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
.தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், ஆணையாளர் சீ.பாலசந்தர், மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், ஜெயபிரதீப் சந்திரன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ் உள்கிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த மாநகராட்சி புதிய கட்டிடத்தில் புகைப்படங்களை பார்வையிட்டனர் அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசிய அவர்.

புதிய மாநகராட்சி கட்டிடம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் இதற்காக 43.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக முதலில் அரசு சார்பாக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது அது போதாது என மேலும் தொகை தேவைப்படும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 43.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தை பொறுத்த அளவில் இந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து முதலமைச்சர் திறந்து வைப்பார் தாம்பரம் மாநகராட்சி இன்று இருப்பது போல் இல்லாமல் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளையும் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எனவே பெரிய மாநகராட்சியாக அமையும் உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு வருடம் உள்ளது அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதற்குள் விரிவாக்கம் செய்யப்படும் அரசு நலத்திட்டங்களை விரிவாக செயல்படுத்த தாம்பரம் மாநகராட்சியின் பகுதியில் விரிவாக்கம் செய்யப்படும்.

மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேட்டபோது

மழை பெய்யட்டும் செம்பரம்பாக்கம் ஏரி போன்ற சுற்று வட்டார பகுதியில் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும் என்றார்