பிளாஸ்டிக் மறுசுழற்சி :தாம்பரத்தில் தொகுப்பு வீடுகள் திறப்பு.

பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில் 9 லட்சத்தில் அமைக்கப்பட்ட 6 தொகுப்பு விடுகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் திறந்த்வைத்தனர்

தாம்பரம் மாநகராட்சிக்கு 4 புதிய குடிநீர் லாரிகள்

ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் மாநகராட்சி வாங்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தனர், இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்

தாம்பரம் மாநகராட்சி இடம் மாற்றம் 43 கோடியில் புதிய கட்டிடம் உருவாகிறது

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது, ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் […]

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியினை தொடங்குவதற்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கோரிக்கை விடுத்தார்

இதையொட்டி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டில் மழைநீர் வடிகால்வாய்களை ஒப்பந்ததாரரின் மூலம் தூர் அகற்றும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அப்போது தி.மு.கழக நிர்வாகிகள் ப.இலக்ஷ்மணன், பார்தசாரதி, அருள் மற்றும் ஜெரி உடன் இருந்தனர்.

தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 48க்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, பூண்டி பஜார் பகுதியில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் மற்றும்மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் திரு.சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 47க்குட்பட்ட, பாரதமாதா தெரு பகுதியில் தூய்மையின் சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை நட்டு வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட ஷாவலஸ் காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையின்படி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்ததன் பேரில்

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகறிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்க்கு தகுந்த இடத்தை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.