
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ஜி.சங்கர் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாடம்பாக்கம்-சிட்லப்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் கூறினர்.
மேலும் அதிமுக மாமன்ற உறுப்பினர் வார்டுகளில் திட்டமிட்டு மக்கள் பணிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையரிடம் புகார் கூறினர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்:-
அவசர அவசரமாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 3 ஆண்டுகள் ஆகியும் மக்களின் அடிப்படை வசதிகளின் தரம் சற்றும் உயரவில்லை என குறை கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் காட்டினார். குடிநீர் இணைப்புகள் இல்லாதவர்களுக்கும் குடிநீர் வரி குறித்த குறுஞ்செய்தி அவர் அவர்கள் செல்போனுக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது மாடம்பாக்கம், சிட்லபாக்கம் கூட்டி குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்ததாக கூறிய சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், இன்றைக்கு அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து பூங்காக்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்காக்கள் மாறி உள்ளதாக குற்றம் சாட்டினார். ஏரிகள் பராமரிப்பு இன்றி கழிவு நீர் குட்டைகளாக மாறி வருவதாக ஆணையரிடம் எடுத்துக் கூறியதாக பேட்டி அளித்த அவர் நாங்கள் கூறிய புகார்கள் குறித்து ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை காரணம் கடந்த மூன்று ஆண்டு காலமாக மக்கள் பணிகளை செய்யாத தாம்பரம் மாநகராட்சி தற்போது செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை ஆகையால் விரைவில் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.