
தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்கு
மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள்.
பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்சிங் ,கணிதா சம்பத் மற்றும் பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்
மின்சார பிரச்சனை பார்த்தால் ஷாக் அடிக்கிறது என ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது மின்சார பில்லை கேட்டாலே ஷாக் அடிப்பதாக கூறினார்.