சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் என மூன்று இடங்களில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் வெட்டிக்கொல்லை

குரோம்பேட்டையில் கடனை திருப்பி கேட்டபோது லாரி உரிமையாளரை வெட்டிக்கொலை, தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சவாரிகாக காத்து இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டர்.

குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை கூலி தொழிலாளியை வெட்டி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போன் பறிப்பு சம்பவத்தில் மருத்துவமனையில் உயிரிழப்பு, மூன்று பேருக்கு போலீஸ் வலை

சென்னை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ் லட்சுமணன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (வயது 50) சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றி செல்லும் தொழில் செய்து வந்தார் அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவருக்கு முப்பதாயிரம் பணம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது இந்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது சபரிக்கும் தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு சபரி பணம் தருவதாக தாமசை திருநீர்மலை சாலைக்கு அழைத்தபோது அங்கு சென்ற தாமசை சபரி மற்றும் சிலர் அவருடன் சேர்ந்து தாமசை சரமாரியாக அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியதால் ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே தாமஸ் உயிர் இழந்தார்.

உடனடியாக அவரதுஉடலை போலீசார் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி மற்றும் அவருடன் வந்த கொலையாளிகளை தேடி வருகின்றனர்,

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்

தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம் அடுத்து இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28).
இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிதடி வழக்குகள் தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ளது.

இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.
இரவு சுமார் 11.30 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சவாரிக்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் கார்த்திக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில், உதவி ஆணையர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதே போல் குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் ஸ்ரீராம் செங்கல் சூளையில் தங்கி பணி செய்யும் கூலி தொழிலாளி ராஜேஷ்(30) இரவு 11 மணிக்கு பணி முடித்து நடந்து சென்றார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. தரமறுத்த ராஜேஷ்சை நெஞ்சு,முகம், காது, சுண்டுவிரல் என சரமாரியாக கத்தியால் குத்தி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போனை பறித்து தப்பி சென்றனர். காயம் ஏற்பட்ட ராஜேஷ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். கொலை வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்துவருகிறார்கள்.

மூன்று வேறு கொலைகளும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஜி.எஸ்.டி சாலையை உள்ளிட்ட பகுதியில் நடந்துள்ளது. இதனால் சாலையில் சென்றவர்களும், பேரூந்துகளுக்காக காத்திருந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.