05.07.2023 தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப தாம்பரம் மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் செம்பாக்கம் மண்டலம் பகுதியில் இன்று பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் இயற்கை வளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணி காத்து இயற்கையான சுவாசத்திற்கு அருமருந்தாக விளங்கும் வெட்டிவேர் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் மூலிகைச் செடிகளை நடும் விழா செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ஜெகன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தினமும் காலை வேளையில் சிட்லபாக்கம் ஏரிக்கரையை சுற்றி நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய மண்டலக்குழு தலைவர் அவர்கள் மூலிகை செடிகளின் நன்மைகள் பற்றியும் குறிப்பாக வெட்டிவேரானது பூமியின் மண்வளத்தில் இருக்கும்.