தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 48க்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, பூண்டி பஜார் பகுதியில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் மற்றும்மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் திரு.சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 47க்குட்பட்ட, பாரதமாதா தெரு பகுதியில் தூய்மையின் சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை நட்டு வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு ஐசிஐசிஐ வங்கி சிட்லபாக்கம் கிளையில் டிகேஸ் ஹீல் அண்ட் க்யூர், சிட்லபாக்கம் நிறுவனர் கார்த்திக் மற்றும் டாக்டர்.திவ்யா கார்த்திக் பிசியோதெரபி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்

இதில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்ட்ரல் ஹஸ்தினாபுரம் எம்.ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மற்றும் கிளை மேலாளர் சிவா, துணை கிளை மேலாளர் ராஜாபிரபு மற்றும் தொடர்பு மேலாளர் ஜெயஸ்ரீ முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

RALLY ON TRAFFIC RULES AND ROAD SAFETY AWARENESS

The students of Shikshaa Mat.Hr.Sec.School in collaboration with Tieke Education conducted a rally on Traffic Rules and Road Safety Awareness in and around Hasthinapuram on 21.08.24 Wednesday around 10.30 am. The students carried placards and posters insisting on the Road Safety Rules and Traffic Rules. They also shouted slogans insisting on wearing seat belts, helmets, […]

விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம்‌ ஜி.எஸ்‌.டி சாலை சரவணா வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு. சஅருண்ராஜ்‌,இ.க.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌/வணிகவளாக ஊழியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா,இ.க.ஆ.ப., […]

தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம் ‌ ஜி.எஸ்‌.டி சாலை போத்தீஸ்‌ வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ச.அருண்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ பொதுமக்களுக்கு வழங்கினார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள்‌, உதவி ஆட்சியர்‌ […]

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பல்லாவரம்‌ மண்டலம்‌ குளக்கரை தெரு பகுதியில்‌ தேர்தல்‌ குறித்து ரங்கோலி கோலம்‌ வரைந்து தேர்தல்‌ விழிப்புணர்வு உறுதி மொழியினை மாநகராட்சி அலுவலர்கள்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுவினர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தாம்பரம் சண்முகா சாலை மார்க்கெட் பகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.