சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஆட்டோ டிரைவர். இவரது மகள் நஸ்ரின் பானு. நேற்று அதிகாலை முதல் தாம்பரம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சாகுல் அமீது, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சவாரி ஏற்ற சென்றபோது மழை பெய்ததால் ஆட்டோவின் உள்ளே மழைநீர் விழாமல் தடுக்க வீட்டில் இருந்த போர்வையை எடுத்து சென்றார்.அவரது மகள் நஸ்ரின் பானு, இரவில் தூங்கும்போது தான் அணிந் திருந்த 9 பவுன் நகையை போர்வையில் வைத்திருந்தார். இது தெரியாமல் சாகுல்ஹமீது, தாம்பரம் ரெயில் நிலைய வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, போர்வையை உதறி பக்க வாட்டில் கட்டினார். அப்போது போர்வையில் இருந்த 9 பவுன் நகை கீழே விழுந்துவிட்டது.

அப்போது தாம்பரம் கடப்பேரி குண்டு மேடு இந்திரா காந்தி தெருவை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 48) என்ற மற்றொரு ஆட்டோ டிரைவர், கேட்பாரற்று கிடந்த நகையை எடுத்து நேர்மையுடன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையில் சாகுல் ஹமீதின் மகள், அவருக்கு போன் செய்து போர்வையில் நகை இருந்த தகவலை கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர், ஆட்டோவை சுற்றிலும் தேடியும் கிடைக்க வில்லை. அப்போதுதான் கோடீஸ்வரன் அந்த நகையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது அவருக்கு தெரிந்தது.

இதையடுத்து மகளுடன் தாம்பரம் போலீஸ் நிலையம் சென்ற சாகுல் ஹமீதிடம் ஆட்டோ டிரைவர் கோடீஸ்வரன் முன்னி லையில் போலீசார் 9 பவுன் நகையை ஒப்படைத்தனர். நகையை போலீஸ் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்த கோடீஸ்வ ரனை தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீசார்