தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலகுழு கூட்டம் மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் கூடியது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தாம்பரம் மாநகராட்சியின் 2025-26 ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையில் 91 திட்டங்கள் நமது இரண்டாவது மண்டலத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து அதனை பட்டியலிட்டு படித்து காட்டினார்.

அதனை தொடர்ந்து 4.15 கோடி ரூபாய் கான சாலை, மழைநீர் வடிகால் என 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் கோடைகாலம் துவங்குவதால் ஆர்.ஓ. நிலையங்கள் பழுதானால் மாமன்ற உறுப்பினர் உடனுக்குடன் தகவல் தெரிவித்தால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதுபோல் முறையாக குடிநீர் வழங்குவதில் அதிக கவனத்தில் எடுத்துகொள்ளப்படும் என கூறினார்.அப்போது 26 வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஸி ராபானுநாசர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம் வின்வெளி ஆராய்ச்சி பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பியதை இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் நானும் பெண் என்பதாலும் இங்கே மாமன்ற உறுப்பினர்கள் பெண்கள் அதிகம் இருப்பதாலும் அவரின் துணிச்சலான வின்வெளி பயணத்தை பாராட்டி சல்யூட் தெரிவித்து கொள்கிறேன் கூறினார்.இதனால் கூட்ட அரங்கத்தில் அனைவரும் நெகிழ்ச்சியில் கைகளை தட்டி கரகோசம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்,