புயல் வெள்ளம் பாதித்த செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், வண்டலூர் வெளிவட்ட சாலை அடையாறு கடக்குமிடம், காஞ்சிபுரம் வரதராஜபுரம், ராயப்பாநகர், பிடிசி காலணி உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர் , மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத் மற்றும் நீர்வளம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

மேலும் பாதிப்பு புகைப்பட காட்சிகளாகவும், ஏரி நீர் நிலை ஆறுகள் குறித்து வரைப்பட காட்சிகளை பார்வையிட்டு வெள்ள சேதங்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது:- சென்னை மக்கள் புயல் மழையால் பாதிப்பு அடைந்துள்ளது பிரதமர் மோடி மிகவும் மனவேதனையில் உள்ளார் சென்னை மக்களின் நிலை அறிந்துள்ளார்.

அதனால் எந்தவித உதவியே பிரதமர மோடி அரசு முன்வந்து செய்யும் அதனால் நான் நேரில் பார்வையிட வந்துள்ளேன் இன்று மாலை ஆய்வு அறிக்கையை பிரதமருக்கு அனுப்புகிறேன் அவர் 100 சதவீகிதம் உதவி புரிவார்.

முதல் தவனையாக ஆயிரம் கோடி அனுப்பியுள்ளார் என கூறினார்..