மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்
அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி
உணவு ஒவ்வாமை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆ ராசாவின் சாதனை முறியடித்தார் செந்தில் பாலாஜி அவரை விட கூடுதலாக மூன்று நாட்கள் சிறையில் இருந்தார்
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.செந்தில் பாலாஜி 471 நாட்கள் பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார்
பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பங்கேற்பேன்: பொன்முடி
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நானும் கலந்து கொள்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து மசோதா தாக்கல்
கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். விஷச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உடல்நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அனைத்து அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய்-அமைச்சர் சக்கரபாணி
மே, ஜூனுக்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். 3 ஆண்டில் ரூ.14,697 கோடியில் பருப்பு, ரூ.64.62 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. மே ஒதுக்கீடான 1.80 கோடி கிலோ பருப்பில் இதுவரை 1.37 கோடி கிலோ வழங்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்காக பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி..
துணை முதல்வராகும் பவன் கல்யாண்!
ஜனசேன் கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராக தேர்வு; தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ., கூட்டத்தில் முடிவு.