
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்தப் பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் – கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்துப் பெற்றோம்.
தி.மு.க. இளைஞர் அணிமாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம்.
பாசிசக் கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம்!
- உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்