
சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பழைய எம்.இ.எஸ் சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளை நோட்டமிடுவதும்,தனியாக இருக்கும் பெண்களை வீட்டின் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் பதற்றம் இருந்து வந்த நிலையில்
போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் ஏறி குதித்து தப்பி செல்வது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தனிபடை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று நள்ளிரவு அந்த மர்ம நபர் இரும்புலியூர் பகுதியில் சுற்றி தெரிவதை கண்ட அபப்குதியினர் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து சேலையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு அந்த நபரிடம் நடத்தபட்ட விசாரணையில் அந்த நபர் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த தமிழ் பிரபு என்பதும் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருவதாக தெரிவித்ததை அடுத்த வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.