
2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33 கேள்விகளை கேட்கவுள்ளனர்.
குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிவார்கள்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிவுநீா் வெளியேற்ற வசதி, குளியலறை வசதி போன்ற தகவல்களை சேகரிப்பார்கள்.
வானொலி, தொலைக்காட்சி, கணினி, லேப்டாப், கைப்பேசி, அறிதிறன்பேசி, இணைய வசதி உள்பட 33 கேள்விகளை குடிமக்களிடம் அதிகாரிகள் கேட்பார்கள்.