தாம்பரம்:- சென்னை தாம்பரம் அடுத்த படப்பை ஒரத்தூர் சாலையில் அபரஜித்தன் என்பவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார், டேபிள், சேர் உள்ளிட்ட மரப்பொருள்கள் தயாரித்துவந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியை மூடி சென்ற நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீடீர் தீபற்றி எரிந்துள்ளது, இங்கு இதில் மரப்பொருள்கள், இயந்திரங்கள், கம்பெனியில் இரும்பு கூரை உள்ளிட்டவை மல மலவென தீ பிடித்து எரிந்துந்துள்ளது, தகவல் அறிந்த படப்பை, ஒரகடம் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை முழுமையாக அனைத்தனர், ஆனாலும் பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போனதாக உரிமையாளர் படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மின் கசிவே தீவிபத்துகான காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.