தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்..

மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்யேக வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

வீடுதோறும் கொசு உற்பத்தியை தடுக்க போதிய நபர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மை பணிகளை செய்ய வேண்டும்.

சிக்குன்குனியா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் – என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.