இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார். எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.