
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரிய வரவில்லை.
நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.