சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக கட்சி, வரலாறாகவே இந்துமதத்திற்கு எதிரான சிந்தனைக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியது.
மேலும், வெறுப்பு பேச்சைத் தொடங்குபவர்கள் பல நேரங்களில் தண்டனை இன்றி தப்பிச் செல்கிறார்கள் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.