
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.
இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.