
திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.