
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது. ஜி.கே.மணி விளக்கம் அளிக்காத நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்த குழு, அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.