
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகியுள்ளன. இதில், 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன.