கடலூர்:- சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது.

உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.

வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.