தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று (மே 22) தொடங்கி வைக்கிறார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைக்கிறார்.

சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி நிலையங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் திறக்கப்படுகின்றன.