
தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இந்தி திணிப்பு,
மாநிலங்களின் நிதிப்பகிர்வில் பாராபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டண பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி.மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்.
அப்போது பேசிய முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம்:-
தமிழகத்திற்கு தாய் மொழி காக்கும் பிரச்சினையும், ஒன்றிய அரசில் உரிமை பகிர்வு என இருபிரச்சனைகள் தலைக்கு மேல் இரண்டு கத்தியாக தொங்கிவருகிறது.
அதனால் தமிழக மக்கள் இன்று முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அடுத்த ஆண்டு வரை 13 மாதங்கள் மக்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.
காங்கிரஸ் கட்சி குரலுக்கும், திமுக குரலுக்கும் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்,
இந்த பிரச்சனைகளில் நடு நிலை என கூறிவிட்டு சில காட்சிகள் 45 நிமிடம் பேசிவிட்டு வந்து ஒன்னும் பேசவில்லை என்கிறார்கள் பேசாமல் என்ன அல்வா சாப்பிடவா போனாங்க என அதிமுக வின் செயல்பாட்டை எடுத்து கூறினார்,
அதுப்போல் தென் மாநிலம் உள்ளிட்ட குடும்ப கட்டுபாட்டை சிரதன்மையுடன் கையாண்ட மாநிலங்களுக்கு உரிமை பகிர்வில் ஆபத்து வந்துள்ளது,
தேர்தல் காரணமாகவும் இந்தி பேசும் மாநில மொழிவுணர்வு தூண்டிவிடும் வகையில் பாஜகவினர் செயல்படுகிறார்கள்,
வட மாநிலங்களில் ஒரு மொழிதான் ஆட்சி மொழியாகவும், பயிற்று விக்கும் மொழியாகவும் உள்ளது ஆங்கில ஆசிரியர்களே கிடையாது வேறு பாட ஆசிரியர்கள் தான் ஆங்கிலம் சொல்லி தராங்க புலமை மிகுந்த ஆங்கில ஆசிரியர்கள் அங்கு இல்லை இந்த நிலையில் தமிழகத்தில் மும்மொழி கொண்டுவர நினைக்கிறார்கள் அது எந்த காலத்திலும் நடக்காது இங்கு இரு மொழி கொள்கையே செம்மையாக்கப்படும் என்றார்,
7 மாநிலங்களில் வெற்றி பெற்றால் போதும் பிரதமர் பதவி என்கிற நிலையை எட்ட முற்படுகிறார்கள்,
தலைக்கு மேல் இரண்டு கத்திகள் கழுத்துக்கு குறிபார்த்து தொங்குகிறது இதனை காங்கிரஸ் குரல் கொடுத்து மக்களுடன் உள்ளது, அதுபோல் திமுகவும் முதலமைச்சரும் ஒரே நேர் கோட்டில் பயணித்து மக்களுக்காக குரல் கொடுக்கிறார், அதனால் மக்களும் மிக மிக கவனமாக 13 மாதங்கள் இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் பேசினார்.