தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, 7-வது ‘‘ஆசிய ஆடவர்‌ ஹாக்கி கோப்பை- 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ்‌ தி பால்‌ – கோப்பை” சுற்றுப்பயணம்‌ கன்னியாகுமரியில்‌ இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின்‌ தலைவர்‌ முகமது தயப்‌ இக்ராம்‌ வழங்கினார்‌. இந்நிகழ்வின்போது, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர்‌ டாக்டர்‌ திலீப்‌ குமார்‌ திர்கி, பொதுச்‌ செயலாளர்‌ போலா நாத்‌ சிங்‌, பொருளாளர்‌ சேகர்‌ ஜெ.மனோகரன்‌, செயல்‌ இயக்குநர்‌ காமாண்டர்‌ ஆர்‌.கே. ஸ்ரீவஸ்தவா, ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின்‌ நிர்வாகி தைமூர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.