குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி 1,3,5 ஆகிய கிலோ மீட்டர் பிரிவில் நடத்தபட்டபட்டது.
இதில் மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என 5,000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பார்வதி மருத்துவமனையின் நிறுவனதலைவர் மருத்துவர் முத்துகுமார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கினர்.