கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது
நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் கைது மன்சூர் […]
குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி
குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நாம் நிரூபிப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
தனது காலில் சுட்டுக் கொண்ட பாலிவுட் நடிகர்!
பாலிவுட் நடிகர் கோவிந்தா லைசென்ஸ் உடன் கூடிய துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் தவறுதலாக இன்று காலை தனது காலில் சுட்டுக் கொண்டார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; மவுனமாக இருப்பதால் என்னை மோசமானவளாக சித்தரிப்பதா?: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆவேசம் –
ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் : உதயநிதி
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட்
நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி
சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.