பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கா.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவர் திரு.திண்டுக்கள் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் திருமதி சோ.மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ்.அருண்ராஜ், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் திரு.கண்ணப்பன், முனைவர் மு.பழனிச்சாமி, திரு.நரேஷ் மற்றும் அரசு அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.