ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.

சென்னை, வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில்

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கா.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவர் திரு.திண்டுக்கள் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை அரசுச் […]

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.

40,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ : வீடுதேடி சென்று வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் […]

குரோம்பேட்டை நேருநகர், ஸ்ரீ அய்யாசாமி அய்யர் துவக்க பள்ளியில் சென்றவாரம் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறை செயல்பாடுகளான கதை, நாடகம், தனிநடிப்பு, உரையாடல், பாடல், கும்மி, வில்லுப்பாட்டின் மூலம் எண்ணும், எழுத்தும் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முன் சிறப்பாக நிகழ்த்தி காட்டினார்கள். பெற்றோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

கேளம்பாக்கத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதி அவர்களும், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், கே டி கே பழனிவேல், கலாவதி தணிகாசலம், திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் திரு கா.கோ.பழனி மற்றும் பள்ளி […]

4,000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது;

மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்; ஆகஸ்ட் 04-ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஆர்பி அறிவித்துள்ளது; மேலும் தகவல்களுக்கு : trb.tn.gov.in

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

19 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ். முதல்வர் விரைவில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம் – இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் பொதுத்தேர்வு, மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் – ராபர்ட் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தகவல்.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் ஸ்ட்ரைக்…பல்கலைக்கழக பணிகள் முடக்கம்..

3 மாத சம்பளம் வழங்கவில்லை என்று கூறி பேராசிரியர்களே சாலையில் இறங்கி போராடுவது உயர் கல்வித் துறையின் சீர்கேட்டை பறை சாற்றுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.