ரத்தன் டாடாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம்!

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது

சென்னை, வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில்

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கா.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவர் திரு.திண்டுக்கள் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை அரசுச் […]

முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது

சிறந்த மாநகராட்சி – கோவை சிறந்த நகராட்சி – திருவாரூர் சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் சிறந்த பேரூராட்சி – சூலூர்(கோவை மாவட்டம்) 78ஆவது சுதந்திர தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார் செயலாளர் டாக்டர் சக்திஷ்நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி; விஜயகாந்தின் நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது; பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது

சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற விழாவில் சின்ன திரை நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் குரோம்பேட் விசுவின் கலை பணியை பாராட்டி இசைக்கவி ரமணன் விருது வழங்கியபோது எடுத்தபடம்.

தாம்பரம் செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் திறன் விருது மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது

திறன் விருது எல்.விஜயலட்சுமி, எல்.ஹக்னிமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த பள்ளி துணை ஆய்வாளர் கிருபாகரன், திட்ட அலுவலர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.

சென்னையில் அச்சகர் தின விழா மெட்ராஸ் பிரிண்டர்ஸ் மற்றும் லித்தோ கிராபர்ஸ் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது

இந்த விழாவில் ஜோகனஸ் குட்டன்பர்க் விருது அச்சக அதிபர் சிரில் சகாயராஜுக்கு வழங்கப்பட்டது. சங்க தலைவர் இளவரசன், தொழில் அதிபர்கள் சீனிவாச ராஜா, கந்தசாமி, ரவீந்திரபாபு ராஜேந்திரன் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் – பிரதமர் மோடி. பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தள்ளார். மேலும், அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.