
குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர்.
தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தார்.
இதனை கண்ட பயணிகள் அங்குள்ள போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது அந்த நபரை போலீசார் அப்புறபடுத்த முயன்றனர். ஆனால் அதிக மது போதையில் இருந்ததால் நடக்க முடியாமல் பேருந்து செல்லும் வழியில் தவிழ்ந்தபடி சென்றார். இதனை கண்ட பேருந்து ஓட்டுனர்கள் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது.
பின்பு போலீசார் அவரை அப்புறபடுத்தினர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.