கூல் லிப்: “குண்டர் சட்டத்தில் நடவடிக்கை தேவை”
‘கூல் லிப்’ உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டில் கூல் லிப்பால் பள்ளி மாணவர்கள் வாய்ப்புற்று நோய்க்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்”

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாடு – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் போதையால் தவழ்ந்து சென்ற வாலிபர்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து […]
போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
புனேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களான அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய […]
தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்

டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக சம்மன் ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை. 1700 மாத்திரைகள் பறிமுதல்

அம்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபன், புளியந்தோப்பைச் சேர்ந்த சஞ்சய், தமிழ்மணி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எரேமியா ஆகிய 4 பேர் கைது.
போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; சென்னையில் 22 காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கஞ்சா, குட்கா போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல் உடந்தையாக இருந்த புகாரில் அதிரடி
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி கரேஷ்(35) உயிரிழந்தார். சிறையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு சென்றபோது வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார்.
“சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்; இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க […]