
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், சி.சாய்கணேஷ், ஸ்டார் பிரபா, கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி, ஜி.எஸ்.புருஷோத்தமன் நன்றி கூறினார்.