
குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார்.
சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:-
குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் புதிய அலுவலகம் திறக்கபட்டதும் தாம்பரம் மாநகராட்சியின் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஒருங்கிணைத்து கண்காணிக்கபடும் என்றார். மேலும் கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் கட்டி முடித்த பிறகு பிரித்யேக ஏ.ஐ பகுப்பாய்வு மென்பொறுள் மூலம் அனைத்து சிசிடிவி பதிவுகளும் கண்கானிக்கபடும் என்றும் தெரிவித்தார்.