இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம்.

19 இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது .16 மொழிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தை நாடக காவலர் செம்மல் ஆர் .எஸ் மனோகரின் அடுத்த தலைமுறை குழுவினர் நடத்துகிறார்கள். எஸ். சிவ பிரசாத் , கலைமாமணி எஸ் சுருதி இயக்கி உள்ளனர்.குரோம்பேட்டை ராதா நகர் கல்ச்சுரல் அகாடமியில்அக்டோபர் 2-ம் தேதி நாடகம் அரங்கேறுகிறது

புதிய அமைப்பு உதயம்.

டாக்டர்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராகவேலு உள்பட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள் தாம்பரம் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மருத்துவர் அனைவரும் பங்கேற்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் பி சந்தானம் தெரிவித்துள்ளார்.இது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்

குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி நேரு பார்க் துப்புரவு பணிகளை ஜெய் கோபால் கரோடியா பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மேற்கொண்டனர்

சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பிரதாப், சுனில், சீனிவாசன், கே.பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர். தாமரைக்கண்ணன் நன்றி தெரிவித்தார்.

குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]

குரோம்பேட்டை 35 வது வார்டில் திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து வட்டசெயலாளர் எம்.கே.சண்முகம் தலைமையில் சின்னதம்பி, எம்.ஐ.டி.குமார் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்

குரோம்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

குரோம்பேட்டை கணபதிபுரம் மணி நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெசி ஜவகர் (வயது 60) சைதாப்பேட்டையில் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு நடந்து சென்று வந்து கொண்டிருந்த போது கணபதிபுரம் விவேகானந்தா தெருவில் சூளைப் பகுதியை சேர்ந்த அக்பர் வயது 22 பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குரோம்பேட்டை நேரு நகர் ராதா நகரை இணைக்கும் பி.டி.சி டெப்போ சாலை மற்றும் நேரு நகர் அய்யாசாமி மேல்நிலைப்பள்ளி சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக புழுதி காடாக காட்சியளிப்பதை கண்டித்து சீர் செய்ய வேண்டி மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மக்கள் விழிப்புணர்வு சங்கம் மா.போ.சி பரலி தமிழ் பேரவை சார்பில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட்டில் விரிசல்

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே கேட்டில் ஒரு பகுதியில் தீடீர் விரிசல் ஏற்பட்டது, இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என போர்டு வைக்கப்பட்ட நிலையில் அந்த கேட்டை கடக்க முறபட்ட வாகன ஓட்டிகள் 2 சுற்றிசெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது, முக்கிய நேரத்தில் முடியதால் கேள்வி எழுப்பினார்கள் இதனால் அறிவிப்பு பலகையை ரெயில்வே பணியாளர்கள் கழட்டி சென்றனர், இதனால் ரெயில் கடந்தவுட் கேட் திறக்கும் என எதிபார்த்த வாகன ஓட்டிகள் திருப்பி சென்றனர்…

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி

குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் […]