தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த சொகுசு கார் மணிகண்டன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே போல் மற்றொரு விபத்தில் மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் (26) ஆயிரவிளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு பள்ளிகரனையில் இருந்து மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே வழியாக பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திந்திர குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இரு உடல்களையும் கைப்பற்றி பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தியவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.