போலீசை குழப்ப வண்டி நம்பரை மாற்றிய பலே கொள்ளையன்
போலீசை குழப்ப ஒ.எல்.எஸ் ஆப்பில் விற்பனைக்கு பதியும் எண்களை தனது பல்சருக்கு பயன்படுத்திய செயின் பறிப்பில் ஈடுபடும் பலே கொள்ளையன் சென்னை-வேலூர்- சென்னை என 350 கி.மீ தூரம் 2ஆயிரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொளையனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி 30 ஆண்டுகளாக 35 வழக்குகளில் சிக்கி இரண்டு பெயரில் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் 17ம் தேதி நடைப்பயிற்சி சென்ற சாந்தகுமாரி(59) கழுத்திலிந்து […]
சேலையூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு வீடியோ வெளியீடு
சேலையூரில் பட்டம் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவிவெளியாகி பரபரப்பு கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ஜெகஜீவன் ராம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பகலில் நடந்து சென்ற நபர் திரும்பி வரும்போது இருசக்கர வானகத்தை ஓட்டி சென்றார். மேலும் இதன் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சிசிடிவி […]
தடுப்புச் சுவரில் வாகனம் மோதல் மனைவி கண் முன்பே கணவர் பலி
தாம்பரம் அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (40) – குணசுந்தரி (32) தம்பதியினர்.இருவரும் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அவர்களது இருசக்கர வாகனத்தில் மின்டிலிருந்து, கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் அதிவேகமாக வந்தபோது கட்டுபட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் […]
தாம்பரத்தில் விலை உயர்ந்த பைக் ஒட்டி பதற்றம் ஏற்படுத்தியவருக்கு 12000 அபராதம்
தாம்பரத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பியபடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபருக்கு 12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடில் இருந்து தர்காஷ் சாலை ,சி.டி.ஒ காலனி வரை வாலிபர் ஒருவர் விலையுயர்ந்த (Harley Davidson) பைக்கில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஒட்டிகள் பதற்றமடைந்தனர். வாலிபரை பிந்தொடர்ந்த […]
திருநீர் மலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த இருசக்கர வாகனம்
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம் தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் […]
கார் மீது மோதியவர்கள் கீழே விழுந்த போது லாரி ஏறி 2 பேர் நசுங்கி சாவு
கேளம்பாக்கம் அருகே கார் மீது மோதிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாரி கீழே விழுந்ததில் லாரி மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு சென்னை ஓ.எம்.ஆர் சாலை படூர் பகுதியில் செயல்படும் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் ஹாரிஸ் ஜான்(19) இவரின் நண்பர் ஷேக்பாஷா(27) இருவரும் கிழக்கு கடற்கரை சாலை கோளத்தில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த காரின் பின்பக்க டோரில் இடித்ததில் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாரி […]
தாம்பரம் அருகே ஒரே இரவில் இரண்டு பேர் விபத்தில் பலி
தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் […]
வேளச்சேரியில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
வேளச்சேரியில் இருசக்கர வானம் மீது தனியார் நிறுவன பேரூந்து மோதியதில் இளைஞர் பலி சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவாசன்(19) வேளச்சேரி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதிய நிலையில் இருசக்கர வாகனம் பேரூந்து கீழே சிக்கியது. இதில் ஜோதிவாசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
முடிச்சூரில் மகன் கண் முன்பே பெண் லாரி மோதி உயிரிழப்பு
தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் டாரஸ் லாரி மோதி பெண் உயிரிழப்பு மகன் கண் முன்னே பரிதாபம், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்று வீடுதிரும்பியபோது ஏற்பட்ட விபத்தால் சோகம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மா.போ.சி தெருவை சேர்ந்தவர் விஜயா(58) உடல் நிலை சரியில்லாததால் மகன் நாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு முடிச்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, அதே மார்கத்தில் சென்ற டாரஸ் லாரியின் இடது புறத்தில் முன்னே […]
நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு.