தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் டாரஸ் லாரி மோதி பெண் உயிரிழப்பு மகன் கண் முன்னே பரிதாபம், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்று வீடுதிரும்பியபோது ஏற்பட்ட விபத்தால் சோகம்

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மா.போ.சி தெருவை சேர்ந்தவர் விஜயா(58) உடல் நிலை சரியில்லாததால் மகன் நாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு முடிச்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, அதே மார்கத்தில் சென்ற டாரஸ் லாரியின் இடது புறத்தில் முன்னே செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியது. இதில் கீழே விழுந்த விஜயா மீது டாரஸ் லாரியின் பின்பக்க சக்கரம் மோதியதில் விஜயா உடல்நசுங்கி பலியானர்.

மகன் நாகராஜன் கண் முன்பாக நடந்த தாய் உயிரிழந்ததில் அதிர்ச்சிடைந்தார்.

இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி ஓட்டுனர் ரமேஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.