முடிச்சூரில் தக்காளி லாரி மோதி தூய்மை பணியாளர் உயிர் இழப்பு

தாம்பரம் முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே சாலையில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்த துப்புரவு தொழிலாளிகள் மீது தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே துப்புரவு தொழிலாளி தர்மன் என்ற தர்மு வயது 35 உயிர் இழப்பு மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் தொழிலாளிகள் குடும்பத்தினர் கதறல் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் இறக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று காலை துப்புரவு பணி […]
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முடிச்சூர் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த மாநகராட்சியின் தனியார் ஒப்பந்தத் தூய்மைப்பணியாளர் தர்மண்ணா உடல் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்

முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
காட்டிக்கொடுத்த கஞ்சா முடிச்சூரில் வாலிபர் வெட்டிக் கொலை

முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (20).இவர் கஞ்சா வைத்திருந்ததால் அவரை அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (20) என்பவர் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து சந்தோஷ் இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்ததின் பேரில் அவரது தாய் சூரியகாந்தி வீட்டிற்கு சென்று செல்போனை மீட்டு தந்துள்ளார்.இதனால் இரு தரப்பினர் இடையே முன் விரதம் ஏற்பட்டு சந்தோஷ் அவரது நண்பர்களான விக்கி (எ) விக்னேஷ் (18) மற்றும் சிலருடன் […]
முடிச்சூரில் மகன் கண் முன்பே பெண் லாரி மோதி உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் டாரஸ் லாரி மோதி பெண் உயிரிழப்பு மகன் கண் முன்னே பரிதாபம், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்று வீடுதிரும்பியபோது ஏற்பட்ட விபத்தால் சோகம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மா.போ.சி தெருவை சேர்ந்தவர் விஜயா(58) உடல் நிலை சரியில்லாததால் மகன் நாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு முடிச்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, அதே மார்கத்தில் சென்ற டாரஸ் லாரியின் இடது புறத்தில் முன்னே […]
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி
முடிச்சூரில் ஆம்னி பஸ்களுக்கு தனி இடம் ஏப்ரல் மாதம் செயல்படும்

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரலில் துவக்கம். மலிவு விலை உணவகம் ஏடிஎம் மையம் விரைவில் துவக்கம். கிளாம்பாக்கத்தில் காவல் நிலைய அடிக்கல்நாட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி. சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரூபாய் 14 கோடியே 35 லட்சம் மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அமைச்ச சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, தாம்பரம் […]
முடிச்சூரில் இருசக்கர வாகனம் திருடும் வீடியோ வைரல்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் […]
முடிச்சூர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்பு மோட்டார் சைக்கிள்கள் பாதிப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்து அடுத்து பழுதாகி வழியிலேயே நின்று போக காரணம் என்ன என பார்த்தபோது பெட்ரோலுடன் அதிக அளவு தண்ணீர் கலந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு
நாடு திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் நேரில் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கினர்