தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர்.

சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கலியை பறித்து சென்று மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர் அவர்களை சாந்தி துறத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில்.

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் இதே போல் பெண் ஒருவரிடம் இதே நபர்கள் இரண்டு சவரன் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்ததை அடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் படி தனிப்படை அமைத்த போலீசார் சுமார் 30 கிலோ மீட்டர் உள்ள சிசிடிவி காட்சிகளை பின் தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் புரசைவாக்கத்தை சேர்ந்த சதீஷ் குமார்(18) மற்றும் மொஹமத் அலி(22) ஆகியோரை கைது செய்து இரண்டு சவரன் தங்க சங்கலியை பறிமுதல் செய்தனர்.

போதை பழக்கம் காரணமாக செலவு செய்ய செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஓப்புகொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.