அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் இந்தியர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்து மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாம் பிட்ரோடாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்ன செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் கூறுகையில் :
சாம் பிட்ரோடா இழிவான பேச்சை பேசியுள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் பேச்சாக அது உள்ளது.
இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி ஐலக அணி தலைவராக வைத்துள்ளது.
தமிழுக்காக போராடுவதாக கூறும் திமுக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிட்ரோடாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உடனான முறித்துக் கொள்ளுமா என பிரதமர் கேட்டுள்ளார்.
ஆனால் இந்த செயலுக்கு பாஜகவை தவிர வேறு எந்த கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
இதற்கு ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், திமுக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக பேசிய நபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூட இங்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே இந்த செயலுக்கு காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் மோகன ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸ் சுதாகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.