
சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். அதன் பின்னர் வீடு திரும்பிய போது பூட்டி இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து உடனே இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப் பட்டு இருந்தது. அதன் பிறகு வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் அனைத்தும் காணாமல் போனது அது மட்டும்
பெரிய லாக்கர் ஒன்றில் 50சவரன் தங்க நகைகளை வைத்த நிலவும் லாக்கருடன் மர்ம நபர் தூக்கிச் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 50 சவரன் தங்க நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வீட்டின் அருகே எந்த சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படாததால் குற்றவாளியை பிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.