தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்பு

சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசியஅளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெற்ற இரட்டையர்களான எஸ்.பி.ரஞ்சன், எஸ்.பி.ரீகன் ஆகியோரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்ப அளிக்கப்பட்டது. பூச்செண்டுகளை கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர் & தேசிய நடுவர் S.T.தியாகராஜன், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பா.குறிஞ்சி சிவா, SCOT TGR பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்கி(எ)E.விக்னேஸ்வரன், முன்னாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கர், K.K.கார்த்திக், மாயாஸ் ரகுராம், K.ராமு, பிரபா பாஸ்கர், A.ரொனால்டோ, J.நரேஷ் அனல் S.பாலசுப்பிரமணியம், தா.மணிகண்டன், மற்றும் விளையாட்டு வீரர்கள் காவல்துறை அணியினர்கள் கழகத் தோழர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.